தனுசு
தனுசு: சப்தம களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், ராசிக்குள் இருந்த கேது அயன சயன போக விரய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.ராகு கேது பெயர்ச்சியில் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம்.
சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.பெண்களுக்கு: திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.கலைத்துறையினருக்கு: வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.அரசியலில் உள்ளவர்களுக்கு: கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.
பரிகாரம் : சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சங்கடம் விலகும். சந்தோஷம் நிலைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 3, 6, 9.
சொல்ல வேண்டிய மந்திரம் : “த்ரியம்பகம் யஜாமஹே” என்று தொடங்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.