அசுவினி
27.07.2017 முதல் 13.02.2019 வரை
எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய அஸ்வினி நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர். உங்கள் நட்சத்திரத்திற்கு பத்தாம் நட்சத்திரமான மகத்திலிருந்து ஒன்பதாம் நட்சத்திரமான ஆயில்யத்துக்கு ராகுவும், இருபத்து மூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்தில் உங்கள் நட்சத்திராதிபதி கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த பெயர்ச்சியின் பலனாக எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர் செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களில் மனநிறைவு அடைவீர்கள்.
எதிர்பாலினரிடம் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். மருந்து, ரசாயனத் தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றி தரும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பக் கவலைகள் மறையும். செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக எண்ணங்கள் உருவாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர் செயல்கள் கோபத்தைத் தூண்டலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்னையையும் சமாளிக்கும் திறமை கூடும்.
கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த செயலைச் செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமுக உறவு ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்வது நல்லது.
பரிகாரம்:
விநாயகர் அகவல் சொல்லி வணங்க பிரச்னைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.