பூரம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
வீரத்தைவிட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய பூர நட்சத்திர அன்பர்களே, நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தேழாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்தாறாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதிமூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி, இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கவைக்கும். உங்கள் திறமையைக் கண்டு பிறர் வியப்பார்கள். அலைச்சலைத் தவிர்த்து களைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உணவு உண்ணாதிருப்பது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காணலாம்.
ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக்கொடுத்து வேலைவாங்குவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணி காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்கள் திடீர் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமை பாராட்டப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு லாபம் பெருகும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும். அரசியல்வாதிகள் செம்மையுற திருத்தமாகப் பணிபுரிவீர்கள். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைப்பிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.
பரிகாரம்:
ஆஞ்சநேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்துவர மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, வியாழன், வெள்ளி.