உத்திரம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் உத்திர நட்சத்திர அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தாறாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்தைந்தாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பன்னிரண்டாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
நீண்டதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் ஆதாயம் தரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவர். கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சகஊழியர்களால் எடுத்த காரியத்தை சாதிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச்செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்டதூரத்துத் தகவல்கள் மன திருப்தியைத் தரும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அரசியல்வாதிகளுக்குப் பொதுவாகத் தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். பின்னால் விளையப்போகும் துன்பத்தை உணராமல் தவறான முடிவுகளில் இறங்கவேண்டாம். மாணவர்கள் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பரிகாரம்:
சிவனுக்கு வில்வதளங்களால் பூஜை செய்து வணங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வியாழன், வெள்ளி.