அஸ்தம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
எந்தக் காரியத்தை எப்படிச் செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் ரகசியமாகத் திட்டம் போட்டு காரியம் சாதிக்கும் அஸ்தம் நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தைந்தாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து நான்காம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதினொன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள்.இந்தப் பெயர்ச்சியால் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்னச்சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப் படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது,
மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷ யங்களைக்கூட கவனமாகச் செய்வீர்கள்.
கலைத்துறையினர் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அரசியல்வாதிகளுக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே சுமுக உறவு இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வெள்ளி.