சித்திரை
27.07.2017 முதல் 13.02.2019 வரை
திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்தவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து நான்காம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து மூன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பத்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எதையும் செய்வதும், எதிலும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பயணங்கள் ஏற்படலாம். அனைத்துத்தடைகளும் அகலும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டலாம், எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிகநேரம் வேலைபார்க்க வேண்டியிருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன் படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும்வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காகப்பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் வெற்றி பெறும். அரசியல்வாதிகள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டு பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்துசேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சககலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்காண அதிக முயற்சிசெய்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வியாழன்.