சுவாதி
27.07.2017 முதல் 13.02.2019 வரை
நல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்துகொண்டு அவர்களைப் பயன்படுத்தி காரியவெற்றி பெறும் திறமையுள்ள சுவாதி நட்சத்திர அன்பர்களே, நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பதில் சிறந்தவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து மூன்றாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து இரண்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஒன்பதாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில், வியாபாரத்தில் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக உண்டாகும் அலைச்சல் வெற்றிதரும். பங்குதாரர்களுடன் இருந்துவந்த பிரச்னைகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தாரின் வீண்பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து, மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிகநேரம் படிப்பது நல்லது.
பரிகாரம்:
புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி.