விசாகம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
எந்த விஷயத்திலும் சாதகபாதகத்தை முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்ளும் திறமையுடைய விசாகம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் குடும்பத்தாருக்கு உரிய மதிப்பளிப்பவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து இரண்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து ஒன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், எட்டாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் வீண்செலவுகள் குறையும், எந்த வேலையை செய்துமுடிப்பதிலும் இருந்த தடை, தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அனுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்கள் அடுத்தவர்கள் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்லது. வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவத் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாகப் படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.
பரிகாரம்:
திங்கட்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மனஅமைதியைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வெள்ளி.