அனுஷம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அனுஷம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து ஒன்றாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபதாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஏழாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் வேகத்தைவிட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். பணவரத்து எதிர்பார்த்ததுபோல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதேவேளையில் மற்றவர்களிடம் உங்கள் கருத்துகளைக் கூறும்போது அவர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.
தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. உங்கள் யோசனைகள் சிறப்பானவையாகவே இருந்தாலும், அதிகாரிகளின் பேச்சைக் கேட்பதும் அவசியம். சகஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே மனஸ் தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பெண்கள் விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். கலைத்துறையினர் எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம்தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம் அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரக சூரியனையும் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வெள்ளி.