கேட்டை
27.07.2017 முதல் 13.02.2019 வரை
சாதுர்யமாக பேசி சகல காரியங்களையும் சாதிக்கும் திறமை உள்ள கேட்டை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உழைப்பினால் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபதாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பத்தொன்பதாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஆறாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகைவிலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றிக் கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.
பெண்கள் சாதக பாதகங்களை பற்றிக்கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். பயணங்கள் செல்ல நேரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெறும் எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம்:
புதன்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணை சாத்தி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வெள்ளி.