பரணி
27.07.2017 முதல் 13.02.2019 வரை
நளினமும், கவர்ச்சியும் கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே, நீங்கள் நேரத்தை
கண் போன்று மதிப்பவர். உங்கள் நட்சத்திரத்திற்கு ஒன்பதாம் நட்சத்திரமான
மகத்திலிருந்து எட்டாம் நட்சத்திரமான ஆயில்யத்தில் ராகுவும், இருபத்து
இரண்டாம் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் கேதுவும் பெயர்ச்சி
அடைகிறார்கள்.
இந்த பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்கள்
முடியும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காகப்
பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை
நம்புமுன் அதைப்பற்றி சிந்திப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரே
குறிக்கோளுடன் இருப்பதைவிட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது
முன்னேற்றத்திற்கு உதவும்.
பணவரத்து அதிகரிக்கும். அரசாங்க
உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் துணிச்சலாகப் பணியாற்றி வெற்றி
பெறுவார்கள். சகஊழியர்கள், மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த
பதவி உயர்வு பெறுவதில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும். கணவன்,
மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
புதிய நபர்களின் நட்பும், அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல்வாங்கலில்
கவனம் தேவை.
பெண்கள் அதிகம் பேசுவதைத் தவிர்த்து செயலில் வேகம்
காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
கலைத்துறையினருக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு
உண்டாகும். சொத்து, மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம்.
வீண்பயம் உண்டாகும். ஏற்கனவே செய்த செயல்களுக்கான பலனை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் சிலர் வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரிடலாம். வீண் வழக்கு
விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுங்கள். வெளியூர், வெளிநாட்டு
பயண வாய்ப்புகள் வரலாம். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.
மாணவர்கள் கல்வியில் முன்னேற கூடுதல் கவனத்துடன் படித்தல் நன்று. ஆசிரியர்,
சகமாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.
பரிகாரம்:
மஹாலக்ஷ்மியை
தினமும் வணங்கவும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு
நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.