பூராடம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் பூராட நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு பதினெட்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினேழாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், நான்காம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் பேச்சுப் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் மனநிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டுச்செய்வது நன்மை தரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் வேலைபார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. முக்கியமாக சக பெண் ஊழியர்களிடம் வரம்பு மீறிப் பேசவேண்டாம். குடும்பத்தாருடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள்கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
கலைத்துறையினர் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். சிலருடன் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி மகிழ்வீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமையில் நவகிரக செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.