உத்திராடம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
திறமைகளை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எடுக்கும் காரியங்களில் குறுக்குவழியை பின்பற்ற மாட்டீர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு பதினேழாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினாறாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், மூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிட்டும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைப் கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த இறுக்கநிலை மாறும். பிள்ளைகள் உங்கள் யோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து வெற்றி பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு, சரியான விதத்தில் முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். அக்கம்பக்கத்தாரின் நட்பு நலம் தரும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குப் பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
பரிகாரம்:
சித்தர்களை வணங்கிவர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி.