திருவோணம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
உழைப்புக்கு அஞ்சாத உறுதியான மனம்கொண்ட திருவோண நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எந்தச் செயலையும் நேரத்தில் செய்துமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு பதினாறாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினைந்தாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இரண்டாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரியவெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் பயணங்கள் செல்லும்போதும், வாகனத்தைச் செலுத்தும்போதும் கவனமாக இருத்தல் வேண்டும். பணியிடத்தில் இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் ஏதாவது ஒருவகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும்.
பெண்கள் கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் சேரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவுநிலை சிறக்க, விட்டுக்கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. அரசியல்வாதிகளுக்கு நீண்டநாளாக இருந்துவந்த பிரச்னைகள் விலகும். திடீர்ச்செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகபயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.