அவிட்டம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
அனுபவ அறிவைக்கொண்டு எந்த பிரச்னை வந்தாலும் எளிதில் சமாளிக்கும் திறமை உடைய அவிட்டம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் வேகத்துடன் விவேகமும் கொண்டவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்குப் பதினைந்தாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதிநான்காம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், உங்கள் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு, மனை வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்னை வராமல் தடுக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப்பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும்.
அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். பொருள்வரவில் குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் வேலை செய்யும் இடத்தில் சிறுசிறு பிணக்குகள் வந்து மறையும். கோபமான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று. அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பணி நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேற்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சகமாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
பரிகாரம்:
விநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, வியாழன்.