சதயம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
கிடைத்தது எதையும் சாமர்த்தியமாக தக்க வைத்துக்கொள்வதில் திறமையுடைய சதயம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்குப் பதிநான்காம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதிமூன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்தேழாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் பொருள்சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண்விழிக்க வேண்டிவரலாம் கவனம் தேவை.
குடும்பத்தாருடன் இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கியக் குறைபாடு பூர்த்தியாகும்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததைவிட குறைவான லாபம் தரும். ஆனால் அவற்றில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிஸியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல்வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். அலுவலகத்துக்குள்ளேயே சீட்டு பிடிப்பது போன்ற இனங்களில் நேர்மையாக செயல்படவேண்டியது முக்கியம்.
பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்களால் இருந்துவந்த தொல்லைகள் தானாக விலகும். கண்களில் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. அரசியல்வாதிகள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாகக் கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உழைப்பு வீண் போகாது. மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்:
நவகிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கிவர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனஅமைதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி.