உத்திரட்டாதி
27.07.2017 முதல் 13.02.2019 வரை
பிரச்னைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்குப் பன்னிரண்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினொன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்தைந்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் நல்ல யோகமான பலன்களைப் பெறப்போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது கவலை உண்டாகும். சொத்து சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சிக்குத்தேவையானவற்றை செய்வீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாகப் பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருட்களை கவனமாகப் பாதுகாப்பாக வைப்பது நல்லது. பெண்களுக்கு காரியஅனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்துவரும்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சககலைஞர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுமுன்னர் சம்பளம் மற்றும் பிற சலுகைகளைத் தீர்மானமாகத் தெரிந்துகொள்வது நல்லது. மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக்கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாட்டு படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமையில் நவகிரக சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய, செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி.