ரேவதி
27.07.2017 முதல் 13.02.2019 வரை
கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் திறமைகொண்ட ரேவதி நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்குப் பதினொன்றாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பத்தாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்து நான்காம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனத்திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியத்தால் காரியவெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். ஆனாலும் மன உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.
கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொற்படி நடந்து உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம். பெண்கள் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்:
பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வியாழன்.