கார்த்திகை
27.07.2017 முதல் 13.02.2019 வரை
அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்படச் செய்யும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கைவிடாதவர். உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து ஏழாம் நட்சத்திரமான ஆயில்யத்துக்கு ராகுவும், இருபத்து ஒன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த பெயர்ச்சி காலத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல் வேண்டும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதூரியமான பேச்சினால் தாங்கள் லாபம் பெறுவீர்கள்.
தேவையான பணஉதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடமும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன்.