மிருகசீரிடம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
நட்பைப் பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே, உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்கும். உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறாம் நட்சத்திரமான மகத்திலிருந்து ஐந்தாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பத்தொன்பதாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சிப்போர் கவனமாக செயல்படுவது நல்லது. புது தொழில் தொடங்குவதற்கான சட்ட திட்டங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது முக்கியம்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களைக் கொள்முதல் செய்து, விற்று, லாபம் ஈட்டமுடியும். சமாளித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய பொறுப்புகள் உண்டாகும். உயர் பதவி என்ற குறிக்கோளை லட்சியமாகக் கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும். இதனால் உறவும், நட்பும் புதுப்பிக்கப்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. உஷ்ணநோய் உண்டாகலாம். அடுத்தவரை ஒப்பிட்டு எதையும் செய்யத் தோன்றலாம். அவ்வாறு செய்யாதிருப்பது நல்லது.
பெண்களுக்கு எண்ணிய காரியம் கைகூடும். வீண் அலைச்சல் குறையும், சிக்கலான பிரச்னைகளில் நல்ல முடிவு கிடைக்கும். கலைத்துறையினர் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரியதாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். அரசியல்வாதிகளுக்கு, பகை பாராட்டியவர்கள் நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்:
அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்கு தினமும் சென்று வணங்க பிரச்னைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, வெள்ளி.