புனர்பூசம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடத் தயங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே, நீங்கள் அனைவரையும் சரிசமமாக மதிப்பவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு நான்காம் நட்சத்திரமான மகத்திலிருந்து, மூன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதி்னேழாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியில் வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். சகஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள்.
பெண்கள் எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத்துறையினர் நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி மகிழ்வீர்கள். சிறப்பான முன்னேற்றம் உண்டு. மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து நவகிரக குருவை வணங்க, நலம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வெள்ளி.