ஆயில்யம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
திறமையையே மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, நீங்கள் ஒழுக்கமாக வாழ விரும்புபவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு இரண்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து உங்களுடைய ஆயில்யத்திற்கு ராகுவும், பதினைந்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி பலனாக வாக்குவன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவீர்கள். வாகனங்களை செலுத்தும்போதும், பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் லாபம் காண்பீர்கள். வர்த்தகத் திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். இதற்கு உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்துசேரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகையால் செலவு ஏற்பட்டாலும், சந்தோஷம் குறையாது இருக்கும். குடும்பப் பிரச்னைகளில் சாதகமான முடிவு உண்டாகும்.
பெண்கள் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். ஆனால் வாகனம் இயக்கும்போதோ, பயணங்களின்போதோ எச்சரிக்கையாக இருங்கள்.
கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருள்வரவில் குறைவிருக்காது. எந்த நேரத்திலும் கோபம் கொள்ளாமல், கடுமையாகப் பேசாமல் இருப்பது நன்று. அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் விடா முயற்சியுடன் படித்து முடிப்பீர்கள். வாகனங்களை செலுத்தும்போது கவனம் தேவை.
பரிகாரம்:
பெருமாளை தினமும் 11 முறை வலம் வந்து வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணக் கஷ்டம் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வியாழன்.