4, 13, 22, 31
27.7.2017 முதல் 13.2.2019 வரை
எதிா்மறை இயக்கத்தின் காரண கிரகமான ராகுவை நாயகனாகக் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, மனதில் தோன்றியதை அப்படியே, தைரியமாக வெளியே சொல்லிவிடுவீர்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துகளை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவதுபோல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர். சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பீர்கள்.
உங்களின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்டு பலர் நண்பர்களாகி விடுவர். இல்லாதவர்களுக்கு உதவுவதில் உங்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப் போல் வெளிப்படுத்துவது முக்கியமான குணாதிசயம். இந்த ராகு-கேது பெயர்ச்சியால் சுணக்க நிலை மாறும். பெரிய முதலீடுகளை கவனமுடன் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் கிடைக்கவேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவு தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் - மனைவியிடையே விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார், உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களில் தாமதம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும்.
முடிந்தவரை தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச்சொற்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற, வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறி இருக்கும்.
தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும். மாணவ, மாணவியருக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின்போது கவனம் தேவை. தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. பொதுவாக உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுக்குப்பின் குணமாகும். எந்த காரியத்திற்கும் அதிக உழைப்பு, அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பரிகாரம்:
அடிக்கடி அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 18 முறை கூறவும்.
மலர் பரிகாரம்:
செவ்வரளி மலரை அம்மனுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.
சிறப்பான கிழமைகள்:
ஞாயிறு, புதன்.
அனுகூலமான திசைகள்:
தெற்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 4.