30.08.2026 முதல் 05.09.2026 வரை
எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதியநட்புகள் கிடைக்கும். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர சிக்கலான பிரச்னைகள் தீரும்.


