12.07.2026 முதல் 18.07.2026 வரை
முயற்சிகள் வெற்றி பெறும். பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கலைத்துறையினர் எந்த காரியத்திலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.


