search-icon-img
featured-img

கடகம்

Published :

12.07.2026 முதல் 18.07.2026 வரை

வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்யோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பர். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவார்கள்.

பரிகாரம்: அம்மனை வழிபட மனகுழப்பம் நீங்கும்.