09.08.2026 முதல் 15.08.2026 வரை
எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தப்படி இருக்கும். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும்.


