search-icon-img
featured-img

மிதுனம்

Published :

12.07.2026 முதல் 18.07.2026 வரை

வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பார்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட மனோ தைரியம் கூடும்.