12.07.2026 முதல் 18.07.2026 வரை
எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.பயணங்கள் சாதகமான பலன் தரலாம். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். பெண்களுக்கு கோபத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் சாதுரியமாக பேசுவது நன்மை தரும்.
பரிகாரம்:சுக்கிர பகவானை வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.


