search-icon-img
featured-img

மீனம்

Published :

12.07.2026 முதல் 18.07.2026 வரை

எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும், விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவார்கள்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர மனகுழப்பத்தை போக்கும்.