31.05.2026 முதல் 6.06.2026 வரை
எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்கும். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கட்டளையிடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: திருவொற்றியூரில் உள்ள தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க தொழில் சிறக்கும்.


