search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

06.09.2026 முதல் 12.09.2026 வரை

குடும்ப பிரச்னைகள் தீரும். சுபச்செலவுகள் ஏற்படும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொருவராக அவரவர் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சம்பளம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும்.மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். பெரியவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு தேவையானதை வாங்கித் தருவார்கள்.

பரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.