search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

30.08.2026 முதல் 05.09.2026 வரை

சந்திரன் சஞ்சாரத்தால் காரிய தடைகள் நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்,மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பர். கலைத்துறையினருக்கு தடை நீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். மாணவர்கள் பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவா ர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வணங்க மனம் மகிழும்படியான அளவில் காரியங்கள் நடக்கும்.