search-icon-img
featured-img

கன்னி

Published :

12.07.2026 முதல் 18.07.2026 வரை

செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.