கடகம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.