பூரம்
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் பதினொன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். சூரியன் - சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பணம் வருவதில் சிரமம் எதுவும் இருக்காது. இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு கோளாறு ஏற்படும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
கலைத்துறையினர்: பிற மொழிப்படங்களில் பணிபுரிவதன் மூலம் மேன்மை காணலாம். வெளியூர் வேலைகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.
அரசியல்வாதிகள்: எந்த காரியம் செய்வதானாலும் மிகவும் எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் செயல்படுங்கள்.
பெண்களுக்கு: வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.
செல்ல வேண்டிய திருத்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தரிசனம் எதிர்பாராத வகையில் பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சுக்கிரன்.