மூலம்
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.குரு - கேது கிரக அமைப்பில் பிறந்தவர்களான நீங்கள் நேர்மையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு: எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். உடல்நலனில் சிறப்பு கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு: கட்சியில் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த பண வரவு இருக்கும்.
பெண்களுக்கு: காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும்.
மாணவர்கள்: யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
செல்ல வேண்டிய திருத்தலம்: திருச்சிக்கு அருகேயுள்ள திருப்பட்டூர் சென்று பிரம்மதேவரிடம் ஜாதகத்தை வைத்து வணங்கினால் தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சுக்கிரன்.