பரணி
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் இருபதாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். செவ்வாய் - சுக்கிரன் அம்சத்தில் பிறந்த
உங்களுக்கு பின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். நட்சத்ராதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப் போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு: இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு: நல்ல காலமாக இது அமையும். வீண் செலவுகள் வரலாம். நல்லபெயர் கிடைக்கும்.
பெண்களுக்கு: வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்குகல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
செல்ல வேண்டிய திருத்தலம்: திருவள்ளூர் அருகேயுள்ள திருவாலங்காடு சென்று வழிபாடு செய்து வந்தால் நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி.
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சுக்கிரன்.