பூராடம்
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். குரு - சுக்கிரன் இணைப்பில் பிறந்த
உங்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு: உற்சாக நிலை உண்டு. சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள்.
பெண்கள்: சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
மாணவர்கள்: கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.
செல்ல வேண்டிய திருத்தலம்: திருக்கோவிலூர் சென்று பெருமாளை வணங்கி வந்தால் தடைகள் உடைபடும். இதுவரை வந்த நற்பலன்கள் தொடரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி.
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சுக்கிரன்.