திருவோணம்
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். சனி - சந்திரன் கூட்டணி யில் பிறந்த நீங்கள் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
கலைத்துறையினர்: தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது அவசியம்.
அரசியலில் உள்ளவர்களுக்கு: எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும்.
பெண்கள்: உங்களது கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.
மாணவர்கள்: எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
செல்ல வேண்டிய திருத்தலம்: திருப்பதி சென்று வணங்கி வந்தால் எந்த விஷயமாக இருந்தாலும் தீர்மானமாக முடிவெடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வியாழன்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன் - குரு - சுக்கிரன்.