சதயம்
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். சனி - ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை எப்போதும் மேலோங்கும். இந்த சனிப்பெயர்ச்சியில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு: மிகுந்த உகந்த காலகட்டமிது. நிதானமாக கையாள்வதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு: எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
செல்ல வேண்டிய திருத்தலம்: கன்னியாகுமரிக்கு சென்று அம்மனுக்கு வளையல் அணிவித்தால் பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வியாழன்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் - குரு - சுக்கிரன்.