புனர்பூசம்
27.12.2020 முதல் 2023 வரை
சனி பகவான் உங்களின் பதினைந்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். குருவை நட்சத்ராதிபதியாகக் கொண்ட நீங்கள் நிதானமானவர்கள். அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
கலைத்துறையினருக்கு: வேலை விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம். எனினும் உயர்வு உண்டு.
அரசியலில் உள்ளவர்களுக்கு: அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். பணம் வந்து குவியும்.
பெண்களுக்கு: அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
மாணவர்களுக்கு: கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
செல்ல வேண்டிய திருத்தலம்: ராமேஸ்வரம் சென்று வழிபாடு செய்தால் தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வியாழன்.
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - புதன் - குரு.