6.03.2026
புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை
குடும்பம்: சனி பகவான், பாக்கிய ஸ்தானமாகிய மீனத்திற்கு மாறியிருக்கும் இத்தருணத்தில், விரய ஸ்தானத்தில், குரு பகவான் நிலைகொண்டுள்ளார். "அஷ்டமச் சனி" யின் பிடியிலிருந்து இப்போது விடுபட்டுவிடுவதும், மிக நல்ல கிரக மாறுதலாகும். கடக ராசியினருக்கு, ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரு முக்கிய அம்சங்களையும் குறிப்பிடுகிறது, கும்ப ராசி! அத்தகைய மிக முக்கிய இடத்திலிருந்து, சனி பகவான் விலகுவது, உங்கள் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை எடுத்துக்காட்டுகிறது. நிரந்தர உடல் உபாதைக்காக சிகிச்சை எடுத்துவரும் கடக ராசி அன்பர்களுக்கு, நல்ல நிவாரணம் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம். நிம்மதியற்ற மனத்திற்கு, மன அமைதி கிடைக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள் நீங்கும். விவாக முயற்சிகளில் ஏற்பட்டுவந்த தடங்கல்கள் விலகி நல்ல வரன் அமையும். கணவன் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் நிலவும். மனதில் அமைதி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டாலும், அதனை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். இரவு நேரப் பயணங்களையும், வாகனம் ஓட்டுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால்், வருமானத்திற்கு மீறிய செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்வது, நல்லது. சிறு, சிறு உபாதைகள் உடலை வருத்துவதால், மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது தவிர்க்க இயலாதது. திருமண முயற்சிகளில், தடங்கல்கள் மற்றும் தாமதமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பகையுணர்ச்சி மேலிடும். ஒருசிலருக்கு, வீடுமாற்றமும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களில், பணம் விரயமாகும்.
உத்தியோகம்: ஜீவன காரகரான, சனி பகவான், பாக்கிய ஸ்தானத்தில் வருவதால், மேலதிகாரிகள், சக - ஊழியர்கள் ஆகியோருடன் பழகுவதில் நிதானமாக இருங்கள். அன்றாடப் பணிகளிலும், கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். ஏனெனில் நன்மையே கிட்டும் காலம் இது. அந்நிய நாடுகளில், வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்கள், இடைத்தரகர்களை நம்பி பணத்தை இழந்துவிடக் கூடும் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்வதால், கவனமாக இருப்பது நல்லது. ஏற்கனவே வெளிநாடுகளில் பணியாற்றிவருபவர்கள், உணர்ச்சிவசப்பட்டு, அவசர முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பெண்மணிகள் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
தொழில், வியாபாரம்: ராசிக்கு 9-ம் இடத்தில் சனி இணைந்திருப்பதால், தொழிலில் கடும் போட்டியைச் சமாளிக்க நேரிடும். தரக் குறைவான சரக்குகள் சந்தையில் உங்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனாலும் வெற்றி உறுதி. புதிய முதலீடுகளை இப்போது தள்ளிப்போடுவது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படும்.
கலைத் துறையினர்: எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள். வரும் வருமானம் கூடும். கிடைக்கும் வாய்ப்புகளிலும், திருப்தியளிக்கும் அளவிற்கு வருமானம் இருக்கும். மக்களிடையே செல்வாக்கும் அமையும் கூடும். எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணங்கள், கடைசி விநாடியில் அமையும். கையிலிருப்பதைக் கொண்டு சற்று சிக்கனமாகச் செலவு செய்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சங்கீத சபாக்களும் எதிர்பார்த்திருந்த அளவிற்கு ஆதரவு தரும்.
அரசியல் துறையினர்: நீங்கள் மிகவும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கும் பிரபல அரசியல் தலைவரின் நட்பு உங்களுக்கு, நன்மையே அளிக்கும். ஏற்றமும், இறக்கமும் அரசியல் வாழ்க்கையில் சகஜம்! என்பதை உணர்ந்துகொண்டால் விரைவில் நிலைமை மாறும்.
மாணவ - மாணவியர்: இதுவரை உங்கள் நலன்களுக்கு மாறாக, வலம் வந்துகொண்டிருந்த புதன், இப்போது சற்று அனுகூலமாக மாறியிருக்கிறார். படிப்பில் மீண்டும் ஆர்வம் ஏற்படும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே கசந்த நிலை மாறி, மீண்டும் பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும்். ஆசிரியர்களின் ஆதரவு, உற்சாகத்தை ஏற்படுத்தும்.
விவசாயத் துறையினர்: கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாகவே உள்ளன. கால்நடைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதால், அவற்றின் பராமரிப்பில் பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை! கால்நடைகள் விருத்தியடையும். இயற்கை சூழ்நிலையும், உங்களுக்கு ஒத்துழைக்கும். சக-நிலத்தாரோடு சுமுக உறவு நீடிக்கும்.
பெண்மணிகள்: சனி பகவான் மற்றும், பூமிகாரகரான செவ்வாயும் உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகின்றனர். ஆயினும், சனியும், ராகுவும் சாதகமாக இல்லை! உழைப்பு கடினமாக இருக்கும். வேலைபார்க்கும் இடத்தில், மேலதிகாரியினால் பிரச்னைகள் ஏற்படும்.
அறிவுரை: பொறுமை, நிதானம் மிக, மிக அவசியம்.
பரிகாரம்: சனி மற்றும் ராகுவிற்கு பரிகாரம் செய்வது, உதவும். சனிக்கிழமைகளில், ஓர் பசுவிற்கோ அல்லது ஏழைக்கோ உணவளித்தால், நல்ல பலன் கிட்டும்.


