6.03.2026
மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை
குடும்பம்: பாக்கியாதிபதியான சனி பகவான், ஜீவன ஸ்தானமாகிய, மீன ராசிக்கு மாறுவதும், ஜென்ம ராசியில், குரு பகவான் நிலைகொண்டுள்ள நிலையில், கடுமையான-கடின உடல் உழைப்பையும், அலைச்சலையும், ஏற்படுத்தினாலும், அதற்குப் பரிசாக பல நன்மைகளையும் ஏற்படுத்துவார் என மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள் விவரித்துள்ளன. குடும்ப நலன்கள், பிரச்னைகள் மற்றும் அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, இடைவிடாத அலைச்சல்களும், ெவளியூர்ப் பயணங்களும் தவிர்க்க இயலாதவை! ஆதலால், குழந்தைகள் மற்றும் குடும்பம் ஆகியவற்றின் நலன்களைக் கவனிக்க இயலாது.எப்போது பார்த்தாலும், பெட்டியும் படுக்கையுமாக வெளியூர்களுக்கும், பல தருணங்களில் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டிவரும். பிரயாணம், அலைச்சல், ஓய்வில்லாத உழைப்பு ஆகியவை உடல் நலனை பாதிக்கக்கூடும். உடல் ஓய்விற்குக் கெஞ்சும். கைப்பணமும் விரயமாகும்.
பாரதப் புண்ணிய பூமியின் மாபெரும் மன்னராக விளங்கிய நளச் சக்கரவர்த்தி, அவரது ஜாதகத்தின் ஏழரைச் சனிக் காலத்தில்தான், நாடிழந்து, மனைவி - மக்களைப் பிரிந்து, மற்றொரு மன்னனின் நாட்டில் சமையற்காரராகப் பணியாற்றிய சோகத்்தை "நளச் சரித்திரம்" விவரிக்கிறது. இந்தச் சோகச் சரித்திரத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ணரே, பஞ்ச பாண்டவர்கள் கடும் காட்டில் வனவாசம் செய்தபோது, எடுத்துக் கூறியதை ஸ்ரீமத் மகா பாரதம் கண்ணீருடன் விவரிக்கிறது. ஆதலால், அவரவரது ஜனன கால ஜாதகத்தின்படி, சனியின் பிடியின்போது, மிகக் கடினமான சோதனைகளுக்கு ஆளாக நேரிடும். என்பதை உணர்ந்துகொண்டு, அதற்கேற்றவாறு தங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் சோதனைகள் நிறைந்த காலகட்டம் இது! கடுமையாக உழைத்தும்கூட, மேலதிகாரிகளின் அதிருப்திக்கும், சீற்றத்திற்கும் ஆளாக நேரிடும். பலர், கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பலருக்கு, வேலைக்குத் தகுந்த கூலி கிடைப்பது கடினமே! உத்தியோகம் காரணமாக, பலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் திடீரென்று உங்கள் நலனுக்கு எதிராக மாறிவிடக்கூடும். அதன் காரணமாக, உங்கள் விற்பனையும், லாபமும் பாதிக்கப்படும். விற்பனை குறையும். பொறாமையினால், சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் பாதிக்கப்படும். முன்பணமில்லாமல், சரக்குகளை வாங்கிச் சென்றவர்கள், அவற்றின் விலையை அளிப்பதில் சுணக்கம் காட்டுவர். இது, உங்கள் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும்.
கலைத்துறையினர்: சந்தர்ப்பங்கள் குறையும். நிச்சயமாகக் கிடைத்துவிடும் என நம்பியிருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். ஆதலால், கலை நிகழ்ச்சிகளில் பணியாற்றிவரும் பிரபல கலைஞர்கள், உங்கள் நிறுவனத்தைவிட்டு, நின்றுவிடக்கூடும். அது உங்கள் லாபத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும். ெபாருளாதாரம் சீர்குலைந்துவிடும். விலகிவிட ஆரம்பிப்பார்கள்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள மூல கிரகங்கள் சனி பகவான், சுக்கிரன், மற்றும் சூரியன் என விவரித்துள்ளது, சாணக்கியரின், "அர்த்த சாஸ்திரம்". சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறனை அளிப்பவர், சனி பகவான்! எதிரிகளும், எதிர்க்கட்சிகளும் பதவி ஆசை, பண ஆசை ஆகியவற்றைக் காட்டி, தங்கள் கட்சிக்கு ஈர்க்க முயற்சிக்கும்போது, அத்தகைய ஆசைகளுக்கு, மயங்கிவிடாமல், மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ளும் வைராக்கியத்தை அளிப்பவர் சனிபகவானே! செவ்வாய் பலகீனமாக உள்ளவர்கள் மட்டும்தான், பணத்தாசை, பதவி ஆசை ஆகியவற்றினால், நாட்டையும், தான் இருக்கும் கட்சியையும், எதிரிகளிடம் காட்டிக் கொடுத்துவிடுவர், சுயநலம் கருதி! இதற்கு சரித்திரத்தில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
மாணவ - மாணவியர்: புதன் சுப பலம் பெற்றிருப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றலும், நினைவில் உள்ளவற்றதைத் தெளிவாக எழுதும் திறனும் கூடும். தேர்வுகளில், நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள்! உயர் கல்விக்கு நிதியுதவி எளிதில் கிட்டும். வெளிநாடு சென்று, விசேஷ சிறப்புக் கல்வி பெற விருப்பமிருப்பின், அந்த ஆசை நிறைவேறும். உயர் கல்விக்கு பண உதவி எளிதில் கிட்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தனது அதிகாரத்தில் கொண்டு, திகழ்பவர் பூமி காரகரான செவ்வாய்! அத்தகைய வீரியமும், பலமும் கொண்டுள்ள செவ்வாய், உங்களுக்கு ஆதரவாக சுப பலம் கொண்டு, சஞ்சரிப்பதால், உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிட்டும்.புதிய கால்நடைகள் சேரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற முடியும். சந்தை நிலவரம் சாதகமாக அமையும். உங்கள் விளைபொருட்களுக்கு, நல்ல வரவேற்பும், விலையும் கிட்டும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள சுக்கிரன், உங்களுக்கு மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால், ெபண்மணிகளுக்கு, நன்மைகளை வாரி வழங்க உள்ளனர், சுக்கிரன், செவ்வாய் மற்றும், புதன் ஆகிய கிரகங்கள்! சனி பகவானும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால்் மகிழ்ச்சிக்குக் குறைவிராது.
அறிவுரை: ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, மீதுன ராசியில் பிறந்துள்ள சகோதர - சகோதரிகளுக்கு லாபகரமான காலகட்டம் இதுவே! தொட்டவை துலங்கும்! எண்ணங்கள் நிறைவேறும்.
பரிகாரம்: கடின உழைப்பினால் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து வந்தால் போதும்.


