search-icon-img
featured-img

தனுசு

Published :

6.03.2026

மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை

குடும்பம்: தனுர் ராசிக்கு அர்த்தாஷ்டக ராசியான மீனத்தில் சனி பகவான் தற்போது சஞ்சரிக்கிறார்! "அஷ்டகத்தில் பாதி அர்த்தாஷ்டகம்" என்றொரு ஜோதிட மூதுரையும் உள்ளது. ராசிக்கு 8-ம் இடத்தில், சனி, குரு, ராகு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் வலம் வரும்போது, உடல் ஆரோக்கியக் குறைவையும், கவலைகளையும், அலைச்சல்களையும் ஏற்படுத்துவார்கள் எனக் கூறுகிறது, "பிருஹத் ஜாதகம்" எனும் பண்டைய ஜோதிட நூல். குடும்பப் பொறுப்புகளினால், அலைச்சல், கவலை அதிகரிக்கும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரனைத் தேடுவதில் செலவும், அலைச்சலும் சோர்வை ஏற்படுத்தும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. கணவர் மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. சப்தம ஸ்தானத்தில் (7-ம் இடம்) குரு பகவான் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், குடும்பத்தில், ஒற்றுமை நிலவும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், மகப்பேறு ஆகிய நிகழ்ச்சிகளால் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு உத்தியோகத்திற்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு வீடு மாற்றமும், சொந்த வீடு அமைவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. பூமி காரகரான ெசவ்வாய், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், சுக்கிரனுடன் சேர்ந்து, "அர்த்தாஷ்டக ராசி"யான மீன ராசியில் சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை அதிகரிக்கும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிநாடு சென்று, பணியாற்ற விருப்பமிருப்பின், இத்தருணத்தில் முயற்சிக்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்கள், சனி பகவானின் பூரண சுப பலன்களையும் பெற்று மகிழ்வார்கள். தற்காலிகப் பணியாளர்கள் தங்கள், தங்கள் பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ெவளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். வெற்றி காத்துள்ளது.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு அதிகாரம் படைத்த சனி பகவான், சுப பலத்துடன் சஞ்சரிக்கும் நிலையில், சுக்கிரன், மற்றும் ராகு ஆகிய கிரகங்களும் அனுகூலமாக இருப்பதால், வர்த்தகத் துறையினருக்கு நல்ல லாபம் காத்துள்ளது. விற்பனையும், லாபமும் உற்சாகத்தையளிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, லாபகரமான தருணம் இது. புதிய கிளைகள் திறப்பதற்கும் அனுகூலமான காலகட்டமும், இதுவே! வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். தேவையான சலுகைகள் எளிதில் கிட்டு்ம்!

கலைத் துறையினர்: கலைத்துறை அன்பர்களுக்கும் சனி பகவான் அனுகூலமாக சஞ்சரிக்கிறார், இந்நிலையில், சம்பந்தப்பட்ட இதர கிரகங்களும்கூட சாதகமாக சஞ்சரிப்பதால், நடிகர்கள் மற்றும் நடிகைகள், சங்கீத வித்வான்கள், நாதசுவரக் கலைஞர்கள் ஆகியோருக்கு, எதிர்பார்ப்பதை விட அதிக வருமானத்தைப் பெற்றுத் தருவார் சனி பகவான். "கொடுப்பதில் சனி பகவானுக்கு இணை அவரே...!" எனக் கூறுகின்றன, புராதன ஜோதிட நூல்கள். கலைஞர்களுக்கு, லாபகரமான காலகட்டம் இது. ஆதலால், சந்தர்ப்பத்தை வீணாக்கிவிடாமல், இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் எதிர்காலத்திற்கென்று!

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டவர், சுக்கிரன் என்றாலும், சனிபகவானுக்கும் அரசியல் துறையில் தீவிர ஆதிக்கம் உள்ளதை, சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்" விவரித்துள்ளது.மற்றபடி, சனி பகவானின் இந்தச் சஞ்சார நிலை அரசியல் துறையினருக்கு, அனுகூலமான காலகட்டமாகும். அரசியல் துறை, சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. சனி பகவான், சுக்கிரனின் நட்பு கிரகமாவார். ஆதலால், இக்காலகட்டம் முழுவதும் அரசியல் துறையினருக்கு ஆதாயமானதாகும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்ட புதன் மற்றும் மற்ற கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் நாட்டம் மிகும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைவாற்றல் மேம்படும். தேர்வுகளில் நல்ல முறையில் விடையளித்து, உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வீர்கள். ெவளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் இறங்கலாம். நிதியுதவிகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. ஆசிரியர்களின் உதவியும், எளிதில் கிட்டும்.

விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற கூலியைக் கொடுப்பதில், சனிக்கு நிகர் அவரே எனக் கூறுகிறது, "பூர்வபாராசர்யம்" எனும் மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தம். உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிட்டும். சலுகைகளும் பணிகளில் உற்சாகத்தைத் தரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் ேயாகமும் அமைந்துள்ளது. அண்டை நிலத்தாருடன் சுமூக உறவு நீடிக்கும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் கொண்ட சுக்கிரனும், சனி பகவானுக்கு ஆதரவாக வலம் வருவதால், குடும்பச் சூழ்நிலை மன நிம்மதியைத் தரும். நெருங்கிய உறவினர்களுடன் ஒற்றுமை நிலவும். விவாக வயதில் உள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு மகிழ்்ச்சிதரும் பணி கிடைக்கும். தற்காலிகப் பணிகளில் உள்ள வனிதையருக்கு, வேலை நிரந்தரமாகும்.

அறிவுரை: கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள். ஏனெனில், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதை கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பரிகாரம்: சனிக்் கிழமைதோறும், பசுவிற்கோ அல்லது ஓர் ஏழைக்கோ உணவளித்து வந்தால் போதும். கைமேல் பலனளிக்கும்.