1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமாகும். பணவரத்து அதிகரிக்கும். மாத இறுதியில் வயிற்று நோய் வரலாம். தொழில் வியாபார நடவடிக்கைகளில் மாதப் பிற்பகுதியில் இறங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். வழக்குகள் சாதகமாகும். பெண்களுக்கு முயற்சிகள் பலன் தரும். மாணவர்கள், கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். வீண் கவலையை தவிர்ப்பது நல்லது.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9;
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வத் தலங்களால் அர்ச்சனை செய்து சிவனை வணங்குங்கள்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களது கருத்துக்கு பிறரிடமிருந்து வரவேற்பு இருக்கும். மாத தொடக்கத்தில் பணவரவு உண்டு. எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடப் பிரச்னைகள் குறையும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர்கள். கணவன்- மனைவிக்கிடையே உறவு வலுப்படும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்கள், தடைப்பட்ட காரியங்களை, மீண்டும் முயற்சித்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நம்பிக்கை அதிகரிக்கும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி;
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9;
பரிகாரம்: நவகிரக சந்நதியில் சந்திரனுக்கு நெய் பொங்கல் நிவேதித்து, விநியோகம் செய்யுங்கள்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். சிக்கலான விஷயங்களை சாதூரியமாக பேசி சாதிப்பீர்கள். தொழில், வியாபாரம், முன்னேற்றம் காணும். உத்தியோகஸ்தர்கள் பணிகளைத் திறம்பட முடித்து பாராட்டு பெறுவார்கள். வீண் பேச்சுக்களைக் குறைத்து குடும்பத்தில் அமைதி காணுங்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். மாதத் தொடக்கத்தில் கோபம் வேண்டாம். பெண்கள், சாதூரியமாகப் பேசுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட வேண்டும். கல்வி தொடர்பான பயணம் ஏற்படலாம்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்;
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6;
பரிகாரம்: நவகிரக சந்நதியில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பொதுவாக எதிலும் கவனமாக இருங்கள். வீண் பிரச்னைகளில் ஈடுபடாதீர்கள். தொழில், வியாபாரம் பற்றி மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் உண்டு. புதிய ஆர்டர்கள் வாங்க, அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து சேருவார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். கோபத்தை குறைத்து இனிமையாகப் பேசினால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்வீர்கள். பெண்களுக்குக் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் பாடங்களை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். பிறரிடம் கவனத்துடன் பழகுங்கள்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்;
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9;
பரிகாரம்: விருப்பப்பட்ட அம்மனை வழிபடுங்கள்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத திருப்பங்களால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு உண்டு. சிலருக்கு அதிகாரப் பதவி கிடைக்கும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்து, நன்மதிப்பைப் பெறுவீர்கள். கணவன்- மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சமாதானமாகப் பேசி வழக்குகளைத் தவிர்க்கப் பாருங்கள். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சக மாணவர்களுடன் நிதானமாக பேசிப் பழகுங்கள்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், சனி ஆகிய நாட்கள் சிறப்பானவை;
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6;
பரிகாரம்: புதன்கிழமைகளில் துளசி அர்ப்பணித்து பெருமாளை வழிபடுங்கள்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம், எதிர்பார்த்தபடியே காரியங்கள் சாதகமாகும். மாத தொடக்கத்தில் கவனமுடன் செயல்படுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் நிதானப் போக்கிலேயே இருக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வு காண்பார்கள்; மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை அனுசரித்து செல்வார். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு மனக் குழப்பம் நீங்கும். மாணவர்கள் கல்வி சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7;
பரிகாரம்: பெருமாள் கோயிலில் தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் மல்லிகை மலரை அர்ப்பணித்து வணங்குங்கள்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம், வருமானம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூக அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் பேச்சின் இனிமை, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பேச்சினால் மேலதிகாரிகளை கவர்ந்து நன்மை பெறுவீர்கள். கைப் பொருட்களில் கவனம் தேவை. இனிய சம்பவங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பூக்கும். உறவினரால் உதவி உண்டு. வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. பெண்கள் புதிதாக அறிமுகமாகிறவர்களிடம், குடும்ப விஷயங்களைச் சொல்லாதீர்கள். மாணவர்கள் சரியா தவறா என்று யோசித்து எதிலும் இறங்குவது நல்லது.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7;
பரிகாரம்: விநாயகரை செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். வருமானம் கூடும். எதிர்ப்புகள் விலகும். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி அபிவிருத்தி அடையும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் அலைச்சலுக்கு ஆளாவார்கள். சக ஊழியர்களின் உதவி உண்டு. வாழ்க்கை துணையால் நன்மை கிட்டும். குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் விருப்பப்பட்டதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்குகள் இழுத்தடிக்கும். பெண்கள், தடைப்பட்ட காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கவலை நீங்கி, உற்சாகம் பிறக்கும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி, சனி;
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 8;
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஐயப்பனுக்கு துளசி மாலை சாத்துங்கள்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் சகோதர வகையில் மனத்தாங்கல் உண்டாகலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்னைகளில் இழுபறியான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் சற்று மந்தமாகும். வரவேண்டிய பணம் தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். நிதானம் அவசியம். குடும்பத்தில் அமைதி மலரும். கணவன்-மனைவி பிரச்னைகள் சுமுகமாக முடியும். இதனால், மனத்தெம்பும் மகிழ்ச்சியும் கூடும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பெண்களுக்கு தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்களுக்கு உற்சாகமான மனநிலை காணப்படும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு;
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9;
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அரளிமாலை அணிவித்து அர்ச்சனை செய்யுங்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.