(1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
மாத இறுதியில் பணவரத்து இருக்கும். ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து எந்த முடிவையும் எடுங்கள். வீண் வாக்குவாதங்களால் பகைதான் வளரும். வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் முடியும். தொழில், வியாபாரத்தினர் அதிகமான அலைச்சலை மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரி பணித்த ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சு வேண்டாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம், நெருப்பு இவற்றைக் கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. பெண்கள் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து குவியும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: தினமும் சிவனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.
(2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவது நல்லது. பிறருக்கு உதவும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தினர் கடின உழைப்பால் முன்னேறுவர்.உத்யோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன்-மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் கூடுதலாக உழைத்து கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: தினமும் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி கோயிலை வலம் வரவும்.
(3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. அவசர முடிவு எடுக்காதீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் உதவியும் கிடைக்கும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தினர் வெளியூர் செல்ல நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்; கவனமாக பேசுங்கள். கணவன்-மனைவி அனுசரித்து செல்லுங்கள். வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். உடனிருப்பவரிடம் எந்த விஷயத்தையும் எச்சரிக்கையாகப் பேசுங்கள்.மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு ஏற்றம் சேரும்.
சிறந்த கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.
(4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
எதிர்ப்புகள் விலகும். கடன் பிரச்னைகள் தீரும். யோகங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனக்குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகஸ்தர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். குடும்பத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். மாணவர்களுக்கு சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து சேரும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9.
பரிகாரம்: சிவாலய நவகிரஹங்களுக்கு நெய் தீபம் ஏற்றவும்.
(5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
சின்ன விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். நிதானம் கடைப்பிடியுங்கள். வேற்று மொழி நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். உங்கள் போக்கில் மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரப் பயணங்கள், அலைச்சல் உண்டாகும். வியாபார விரிவாக்கத்தில் தடை தோன்றலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை, அலைச்சல், சோர்வு உண்டாகும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை நீங்கும்... கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். விருந்தினர் வருகையால் செலவு உண்டாகும். பெண்களுக்கு திடீர் கோபம் உண்டா கலாம். நிதானமாகப் பேசுங்கள்; நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன் னேற்றம் காண்பார்கள். கலைத்துறையினருக்கு கௌரவம் அதிகரிக்கும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், சனி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6.
பரிகாரம்: புதன், சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலை 11 முறை வலம் வரவும்.
(6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
தெளிவான சிந்தனை தோன்றும். முன்யோசனையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்; பாராட்டு பெறுவீர்கள். விஐபிகளின் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது நபர்கள் அறிமுகமும் அதனால் நன்மைகளும் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்குப் புதிய பொறுப்பும், வாகன யோகமும் கிட்டும். சக பணியாளர்களால் நன்மை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன், மனைவி மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்துக்கு உதவும். பெண்கள், பிறர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பு தவிர, விளையாட்டு, பொழுதுபோக்குகளில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு துணிச்சல் ஏற்படும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7.
பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்குச் சென்று கருடரை வணங்கவும்.
(7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். எதிரிகள் தாமாகவே விலகிவிடுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. உத்யோகஸ்தர்கள் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நிலுவையில் இருந்த பதவி உயர்வு தேடி வரும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். சூரியன், ராகு சஞ்சாரத்தால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். பெண்களுக்கு சாதுரிய மான பேச்சால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு செலவுகள் கூடும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.
பரிகாரம்: தினமும் விநாயகருக்கு நெய் விளக்கு ஏற்றி அரச மரத்தை வலம் வரவும்.
(8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். ஆனால், முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசுவதால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் தாமதமாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சல், கூடுதல் செலவு ஏற்படும். வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தாருடன் வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள். பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிருங்கள். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி படித்தல் வேண்டும். கலைத்துறையினர் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.
சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 8.
பரிகாரம்: தினமும் நவகிரகங்களை 11 முறை வலம் வரவும்.
(9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...)
முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். கீழ் வேலை செய்பவர்களால் கோபம் உண்டாகலாம்; நிதானமாக அவர்களிடம் பேசுங்கள். உத்யோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவால் செலவு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் சச்சரவு உண்டாகலாம்.பெண் களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் பழி ஏற்படலாம். மாணவர்கள் எந்த வேலையையும் கவனமாக செய்வது நல்லது. கலைத்துறை யினருக்கு அலைச்சல் ஏற்படும்.
சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கோயிலில் முருகனுக்கு அரளிப்பூ சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.