1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதமாகும். வாழ்க்கைத் துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகஸ்தர் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திப்பீர்கள். மாத இறுதியில் வியாபாரப் போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்களின் வருகை இருக்கும். குடும்பச் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்துங்கள். பெரியோர் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஏற்றமுள்ள மாதம்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை தோறும் சிவனையும் அம்பாளையும் தரிசித்து வாருங்கள்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
உடல் ஆரோக்யம் கூடும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். துணிச்சலுடன் ஈடுபடும் காரியம் சாதகமாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிட்டும். உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனோதைரியம் கூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறை யினருக்கு வெற்றிகள் குவியும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
உடல்நலம் மேம்படும். சமூகத்தில் மரியாதை உயரும். பணம் பல வழிகளில் வரும். அதோடு செலவும் வரும். வாக்கு வன்மையால் புகழ் கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும். புதியவர்களை நம்பி இறங்கும்போது கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சல் அதிகமாகும். ஆனால், எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வெளியூர், வெளிநாட்டுப் பயணம் திட்டமிட்டபடி அமையும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி உண்டாகும். பிறர் பாராட்டும்படி பெண்கள் செயல்படுவார்கள். மரியாதை, அந்தஸ்தும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விடுமுறை கால கல்வி கற்பார்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலிலுள்ள குருபகவானை தரிசித்து வணங்கி வாருங்கள்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறி தோன்றலாம். நிர்ப்பந்தத்தால் மனதிற்குப் பிடிக்காத வேலையை செய்ய வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருந்தால், நன்மை. எதிர்காலம் பற்றிய கவலையும் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்களால் லாபம் உண்டு. அரசாங்கத் தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லுங்கள். பெண்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பணவரத்து தாமதமாகும். வாக்குறுதியும் அளிக்காதீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் சிவன் கோயிலை வலம் வாருங்கள்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
வீண் செலவை குறையுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் அவச் சொல் உண்டாகலாம். தொழில் வியாபார பணிகளை கவனமுடன் செய்யுங்கள். வீண் அலைச்சல் தரும், உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் கொடுத்த பணியினை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். குடும்ப விஷயங்களைப் பொறுப்பாகச் செய்யுங்கள். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுங்கள். விவேகமாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள். பெண்கள் வீண் முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். மாணவர்களுக்கு கல்வி அலைச்சல் உண்டாகும். ஆசிரியர் ஆலோசனைப்படி செய்வது எதிர்கால நன்மைகளுக்கு வழி வகுக்கும்.
சிறப்பான கிழமைகள்: புதன், சனி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7.
பரிகாரம்: புதன் கிழமைகளில் துளசி மாலையை பெருமாளுக்கு அர்ப்பணித்து வலம் வரவும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்யம் கெடலாம். காரியத்தடை, தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் இப்போது வேண்டாம். பணவரத்து கூடும். கடன் பிரச்னை கட்டுப்படும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில் வியாபார செலவுகள் அதிகரிக்கலாம். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். உத்யோகஸ்தர்களின் பணி பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவி அனுசரித்து செல்வதால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பெண்கள் எதற்கும் தயக்கம் காட்டாதீர்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால், எதிர் காலத்தில் நினைத்தபடி மேற்படிப்பை தொடர முடியும். கல்வி கடன் முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். கலைத்துறை யினருக்கு நீண்டநாள் பிரச்னை முடிவாகும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.
பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வரவும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். புதிய தொடர்புகளால் மகிழ்ச்சி, கௌரவம் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஆனால், செலவுகள் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலையாக வெளியே செல்லும்போது கவனம் தேவை. பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். பெண்களுக்கு புதிய நபர்களால் காரிய பலிதம் ஏற்படும். சுபவிசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். உயர்கல்வி முயற்சிகள் சாதகமாகும். கலைத்துறையினருக்கு அலைச்சல் இருக்கும்.
சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9.
பரிகாரம்: தினமும் விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எந்த வேலையை செய்து முடிக்கவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பணவரத்து தாமதப்படும். வீண் கவலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. போட்டிகளால் பாதிப்பு இருக்காது. உத்யோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன் - மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்களுக்கு மனோதைரியம் உண்டாகும். செலவு கூடும். மாணவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். விடுமுறையில் உயர் வகுப்பு பாடங்களை படிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வருமானம் அதிகமாகும்.
சிறப்பான கிழமைகள்: புதன், சனி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 8.
பரிகாரம்: தினமும் முன்னோர்களை வணங்குங்கள்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில். தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். திறமையாக செயலாற்றினாலும் பாராட்டு கிடைக்காது. தூக்கம் குறைவு, கனவுத் தொல்லை ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர் விஷயங்கள் தாமதமாகும். உத்யோகஸ்தர்கள் எந்த வேலைக்கும் அதிக அலைச்சல் ஏற்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடைபடும். மேலதிகாரியை அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் நீங்கள் சொல்வதைக் கேட்காமல் அவரவர் மனப்போக்குபோல நடந்துகொள்வார்கள். பெண்களுக்கு வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படித்தால் நல்ல எதிர்காலம் அமையும். கலைத்துறையினருக்கு திடீர் செல வுகள் உண்டாகலாம்.
சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று சந்தன அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.