கிருத்திகை, உத்திரம், உத்திராடம்: “மனம் வெம்பும் குலத்துப் பீடை கொண்டுறவாடும் பணியில் சஞ்சலஞ் தோன்றியே யலைக்கழிக்குந் திரவியமது சற்றே விரயமாகிப் போம் கருமங்களே தாம தமாம் ரதவழிப் பீடையு முண்டாம் கடனுபாதை தோன்றவே (குன்றக் குடியுறை) மாலீச்சுரமுறை குமரனைக் கொண்டாடி தொழவே துயரகன்று யின்ப பயமுக்கு மென்றனமே.” - சிவ வாக்கியர்.
மனச் சலனம் தோன்றும். குடும்பம், தொழில் பிரச்னைகள் தோன்றி மறையும். விரயம் அதிகமாவதால் பணத்தேவைகள் கூடும். எந்த காரியத்திலும் தாமதம் உண்டாகும். வாகன விபத்து ஏற்பட்டு விலகும். கடன்கள் தோன்றும். குன்றக்குடி உறையும் அருள்மிகு குமரனை கொண்டாடித் தொழுதக் கால் துயரம் நீங்கி இன்பம் பயக்கும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்:
“அலைச்சலுடனே தனந்தான் விரயந்தருமே
வெப்பமேறி யுபாதை மெய்யெட்டுமே.
வாழ்வில் துணையான பேராலுஞ் சோகமுண்
டாங் கேளீர் பொன் பொருள் சேர்க்கையுமுண்டு
வாக்கு தன்னால் மேன்மையாம் அக்கினி சேத்திரமா
மண்ணாமலையாரை யடிபணிவாருக் கிடரேதுயியம்பு.”
- பாம்பாட்டி சித்தர்.
வீண் அலைச்சல், வேண்டாத பயணம் ஏற்படும். உஷ்ணக் கோளாறு தோன்றும். மக்களாலும் வாழ்க்கைத் துணையாலும் மனம் வருந்தும். சிறிதளவு திரவியம், தங்கம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சொல்லுக்கு வெளிவட்டாரத்தில் மரியாதை சேரும். திருவண்ணாமலையாரை ஆராதித்து வர தொல்லை மறைந்து இன்பம் சேரும் என்பதாம்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்:
“தனவரத்து பற்பலமாய் சேர பணி
மாற்றமுண்டு சம்பத்துங் குறைவின்றியே
கூட சுபவிரயந் தடுத்தற் பாற்றன்றே
மூத்தோர் சொல்லாலகமே நோவ பெண்டி
ராலுந் தொல்லை வந்தண்டுமே பக்குவமாய்
பாங்கோடு வாணிபஞ் செய திரவியங் குவியு
மென்றுணர்வீரே ஆதியாந் தேவி யமர்நிலை
நின்றாளைத் தாந் தொழுது யேகம்பனை
யேத்தவே வலிதாம் வினையகன்றின்பங் காணுமே.“
- காகபுஜண்டர்.
பல வழிகளிலும் திரவியம் சேரும். பணியில் சிறு மாற்றம் வரும். மனம் நிம்மதி காணும். சுபச் செலவுகள் தோன்றி திணறடிக்கும். பெரியோர் வழி காட்டுதல் மனத்தை சங்கடப்படுத்தும். மிகுந்த எச்சரிக்கையுடன் தரகு, பங்கு வாணிபங்களில் ஈடுபட்டு திரவியம் தேடலாம். ஏகாம்பர நாதனையும், அன்னை காமாட்சி தேவியையும் வழிபட்டு வாழ்வில் இன்பத்தைப் பெறலாம்.
திருவாதிரை, சுவாதி, சதயம்:
“கீர்த்தியோங்குமே யெடுத்த கருமஞ்
ஜெயம் பெறவே தன்வரத்தொடு நாடிய
பொருளுங் கிட்டுமன்றோ? பகுத்துணர்ந்து
பாங்குடன் கருமஞ் செய சொல்லொணா
நன்மை யுண்டொன்று வுணர்துமே புனிதமென
பயம் போவ தும் மேலோர் நேசமுஞ்
சேரப் பாரே வடபத்திர சயனனை ஆராதிப்போருக்கு
இம்மையில் இன்பமென்றுரைப்பமே.”
- ராமதேவ சித்தர்.
புகழ் ஏற்றம் பெறும். எந்த காரியத்திலும் வெற்றி சேரும். பொருள் வரவு திருப்தி தரும். நன்கு ஆராய்ந்து முடிவெடுத்தால் பெரிய நன்மையை பின் னாளில் எட்டலாம். பெரியவர்கள் நட்பும், புனிதப் பயண யோகமும் சேரும். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திர சயனரை சரணடைய இம்மையில் எந்நாளும் இன்பமே என்பதாம்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி:
“முன்னிலறுபட்ட தொரு கருமம் பின்னிலின்
பமது பயக்குமே வேண்டிய பணி யெண்ணியவாறு
பொறுங்காமீதே நிதான புத்தி நிறை வாழ்வீயு மென
அரை நாவன்மையால் நன்மை பெறலாமே கல்வி ஞானஞ்சேருமாம் ஆன விரயமெல்லாமானந்தத்தையே
யள்ளிடும் பாரீர் சிரமது நீங்கி தனவரத்து காணும் பொறுத்தே
போய் பேரின்பங் காணலாமே நன்றே மந்தனை
தான் விரும்பியே அற்ற தானியத்தாலாராதிப்ப
குச்சனூரான் குளிர்விப்பான் மெய்யே.“
- கோரக்கர்
தடைப்பட்ட காரியம் எல்லாம் விரைந்து நடக்கும். எதிர்பார்த்த தொழில், காரியங்கள் அனுகூலமாகும். கோபதாபங்களை விட்டு அவசர புத்தியை சீர் செய்தால், இன்பத்திற்கு ஏது குறை? இதுவரை பற்பல வழிகளில் விரயம் வந்தாலும் அதுவும் நன்மைக்கே என மனம் சோர்விலிருந்து விடுபடும். புத்திக் கூர்மை, சொல் வன்மையால் வெற்றி, புகழ் பெறலாம். குச்சனூர் சனிபகவானை நல்லெண்ணெய் மற்றேனைய பொருட்களாலும் ஆராதிக்க, சகல நன்மையும் கிட்டும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி:
“பொருட் பீடை யுண்டாம்: தன்னிலை
கெட்டு தரங் குன்றும் விவாதமோடு
வில்லங் தோன்றியே அலைகழிக்கு
மென வறி புண்ணாக்கோடு சிரப்
பீடை கும்பி மூட்டு வாதப் பீடை
வந்தே வருத்தப் பாரு கடனுபாதை தீர்க்க
உடமை யிழக்க வேண்டுந் நேரமிது அப
கீர்த்தியோடு ராசர் பயமுமேற பிரதோஷ
காலத்து கதந்தீச பூசை புரிந்தோர் பிசகாது மேல் நிற்பாரே.”
- பதஞ்சலி சித்தர்.
பொருளுக்கு பீடையுண்டு. பணக்கஷ்டம் வந்து விலகும். மனது பாரமாக இருக்கும். கடன்களை அடைக்க, உடைமைகளை இழக்க நேரிடும். அரசுப் பணியிலிருப்போரால் அச்சம் உண்டாகும். நந்தி தேவரையும், சிவபெருமானையும் பிரதோஷ காலத்தில் வழிபட்டு வர எவ்வினையும் அண்டாது.
ஆயில்யம், கேட்டை, ரேவதி:
“வியாழனால் வில்லங்க மழிய நட்புச்
சீராகுமே தீயோரொழிய நல்லோரிணக்கமினி
உண்டாம் பிரிந்த உறவும் இன்பமுற்று
இனிது சேர யிதுகாருமிகுந்த பழிபாவ மறுபட்டு
மேலாய் வாழ்வீரே கைப் பொருள்
கூடுமன்றி பஞ்சாயத்துஞ் சாதகமாமே
நவநாயகரை தொழுதேத்தி நிற்ப நயமுடனே
பிணியறுபட்டு நீடு வாழலாமே“
- அழுகணியார்.
நவகிரகங்களை அனுதினமும் தொழுதுவர சுபிட்ச வாழ்வு வாழலாம். சற்று பணக்கஷ்டம் வரும். தன்மானம், சுய கவுரவம் தளரும். ஆனால், மனந்தளராது. வீண் சச்சரவுகள், வாதத்தால் தொல்லை உண்டு. விலக்கவும். தீயவர் ஒதுங்குவர். நல்லவர் சேர்ந்து நிலைத்திருப்பர். பிரிந்த உறவினர், விரோதம் மறந்து அன்பு பாராட்டுவர். பொருள் வரத்து சேரும். வழக்குகள் சாதகமாகும்.
அசுவினி, மகம், மூலம்:
“மேலோர் நட்பு மேன்மைக்கடி
கோளும் எதிலுமே செயமென்னுங்
காலமிது ஆட்சி யதிகாரங் கூடும்
கீர்த்திக்கு குறைவேது வைரியரு
மொடுங்க வருங்காலமது பொன்னே
யென்ன யுள்ளங் கூத்தாடுமாயினு மேனியில்
கேடுண்டு ஒளிந்துறையும் கிருமியரை
கொன்று புத்துணர்வு பெற வைத்தீசனை
யோடி தொழுவீரே.”
- அகப்பை சித்தர்.
மேலான வாழ்வு அமையும். உயர்ந்த பதவியிலிருப்போர் நட்பும், பெருமையும் சேரும். எதிர்கால சுபிட்சம் உண்டு என்ற நம்பிக்கை பிறக்கும். மகிழ்ச்சி உண்டு என்றாலும், தொற்றுக் கிருமிகள் உடலில் கேடு செய்யலாம். வைத்தியநாதனைத் தொழுதுவர நோயற்று வாழலாம்.
பரணி, பூரம், பூராடம்:
“பணிக் கொத்தாசை சேருமே பழியுமகலுமே
மணவாழ்விலினி யின்பமுண்டு பட்டதுய
ராயிரமது யினி படுமென்றுணர்த்துவமே
ஆன விரயமது யினி யறுபடுமாயினு
பொறையுடையார் தம்மால் சற்றே யிரக்கமு
முண்டே கைப் பொருள் முடங்கியே
பித்தொப்ப நிற்பினு மேலான செல்வம்
சேர்ந்தின்புறவவே வழகனாருக்கு காவலாய்
படி பதினெட்டானை அக் கருப்பண்ணனை
ஆராதிப்ப பகைவரழிவர் பொல்லாங்ககலு
மன்றி பொருளுங் கிரி யொப்பச் சேருமே.”
- அழுகணிச் சித்தர்.
தொழில் இடையூறு நல்லோர் வாசத்தால் நீங்கும். குடும்பத்தில் முழு இன்பம் சேரும். பட்ட துன்பங்கள் நீங்கும். பொறாமைக்காரர்களால் தொழிலில் சரிவு ஏற்பட்டு அகலும். கைப்பொருள் முடங்கும். சிலநேரம் பித்தரைப்போல மனம் அலைபாயும். கள்ளழகர் கோயிலில், காவல் தெய்வமாம் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியை ஆராதிக்க சோதனைகளைக் கடந்து இன்பம் பெறலாம்.
நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.