1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
சுப பலன் உண்டாகும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றும் எண்ணம் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கக்கூடும். தொழில், வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை குறையும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சால் காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளை யாட்டு மற்றும் பிற போட்டிகள் சாதகமான பலன் தரும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு அபிஷேகத்திற்கு எண்ணெய் கொடுக்கவும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்காது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத செலவு, உடற்சோர்வு உண்டாகலாம். திருமண முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தாருடன் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த்து விடுங்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பெண்கள் அனாவசிய விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மேற்படிப்பு ஆர்வம் உண்டாகும்; தேவையான உதவிகள் கிடைக்கும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.
பரிகாரம்: திங்கள் தோறும் லலிதாம்பாள் திரிசதி சொல்லி வழிபடவும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பிறருக்கு உதவும் எண்ணம் உண்டாகும். மனக்கவலை, எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் நேரத்திற்கு உணவு உண்ண முடியாது போகும். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் தாமதமாக வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை செலுத்தும்போதும் நெடுந்தூர பயணங்களின் போதும் விழிப்புடன் இருங்கள். பெண்களுக்கு வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் பிடித்தமான மகானுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யவும்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
காரிய அனுகூலம் உண்டாகும். தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் முன்னேறும். வேலை தேடுவோருக்கு வாய்ப்புகள் வரும். பெண்களுக்கு எந்த விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மன வலிமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சிக்கல்கள் குறையும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 9.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வலம் வருவது சிறந்தது.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம், மனதுக்கு உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையால் பாராட்டு பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்னைகள் சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்னைகள் குறையும்.
சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: புதன் தோறும் பெருமாளுக்கு விளக்கு ஏற்றவும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார விரிவாக்க
முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆனால், போட்டிகளால் கவலை தோன்றும். உத்தியோகஸ்தர்கள் திறமையால் சிறப்பு பெறுவர். குடும்பத்தில் சுபவிசேஷம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பொழுதை கழிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எண்ணப்படி காரியங்கள் முடியும். மாணவர்கள் பாட சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது.
சிறப்பான கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
மாதத் தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பைக் கையாளும்போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவிகள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கோபம் வேண்டாம். பெண்கள் இனிமையான பேச்சால் சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள்.
சிறப்பான கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6.
பரிகாரம்: வியாழகிழமை தோறும் அருகிலிருக்கும் வினாயகர் கோவிலுக்குச் சென்று அறுகம்புல் மாலை சாத்தி வழிபடவும்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எதிர்ப்புகள் அகலும். பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உதவுவர். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபார காரியங்கள் மெத்தனமாக இருக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடியுங்கள். அக்கம் பக்கத் தாரை அனுசரித்து செல்லுங்கள். பெண்களுக்கு திடீர் கோபம் உண்டாகலாம். அமைதியைக் கடைபிடியுங்கள். மாணவர்களின் மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலில் உள்ள வேலுக்கு பாலபிஷேகம் செய்து வலம் வரவும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.